Posts

Showing posts from May, 2017

மருத்துவக் குறிப்புகள்

Image
வாயு தொல்லை நீங்க!!! சுக்கு - 50 கிராம் மிளகு - 50 கிராம் திப்பிலி - 50 கிராம்  இந்துப்பு - 50 கிராம் சீரகம் - 50 கிராம் கருஞ்சீரகம் - 50 கிராம் கடுக்காய் - 50 கிராம் பெருங்காயம் - 50 கிராம் சாதிக்காய் - 50 கிராம் இவை அனைத்தையும் முறைப்படி சுத்தி செய்து தனித் தனியாக மிக்ஸியில் போட்டு பொடி செய்து, பின் எல்லா பொடிகளையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். தேன், மோர், வெந்நீர் இதில் ஏதாவது ஒன்றுடன் கால் டீஸ்பூன் அளவு கலந்து காலை, இரவு சாப்பிட்டு வர வாயு தொல்லை, விலா எலும்பு வலி, இடுப்பிலிருந்து மார்பு வரை வேதனை தரும் வாயு தொல்லை, மூச்சை அழுத்தி பிடிக்கும் நெஞ்சு வலி, முதலியவைகள் குணமாகும். மோர்!!! மோருண வளிமுதல் மூன்றையு மடக்கி யாருமெய் யினைத்தின மாதரித் திடுமே - தேரையர் காப்பியம். மோர் தினம்தோறும் குடித்து வந்தால் உடலில் முக்குற்றங்களும்* கூடாமலும், குறையாமலும் ஒழுங்கு பெற செய்து உடலை ஒவ்வொரு ஆளும் ஆதரித்து வளர்த்து வரும். (முக்குற்றங்கள் - வாதம், பித்தம், கபம்) via Easwari Ragu

முழங்கால் வலி போக்கும் பிரண்டை

Image
||  ஓங்காரக்குடில் Ongarakudil  ||  Wisdom of Siddhas சித்தரியல்  || || <3   Aum Muruga ஓம் மு௫கா   <||||| bbb3 ||  Contact தொடர்பு  || ||  Videos  || "முழங்கால் வலி அதிகமாக இருக்குது" ஏதாவது பண்ணுங்க என்றார்கள் இரண்டு நபர்கள்.. கடந்த இருபது நாளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்ட பின்பு கடந்த ஒருவாரமாக வலி சுத்தமாக இல்லை என்பது மட்டுமின்றி உடல் சோர்வு அறவே இல்லாமல் இருக்கிறது என்றார்கள் எங்கம்மா ஏர் உழும் காலங்களில் கால் வலியை போக்க பிரண்டை, மல்லிதலை, தூதுவளை, கறிவேப்பிலை சேர்த்து துவையல் செய்து தந்த ஞாபகம்! அதைய ே இங்கு செய்தோம். பிரண்டையில் உள்ள மிகையான சுண்ணாம்பு சத்து(கால்சியம்) தான் எலும்பு மச்சையில் திரவம் அதிகமாக சுரக்க கால்சியம் தேவை.. அதுமட்டுமின்றி வாயில் ஆரம்பித்து ஆசனவாய் வரை உருவாகும் 300 விதமான நோய்க்கும் சிறந்த மருந்து பிரண்டை என போகர் நிகண்டுவில் குறிப்பிடபட்டுள்ளது குறிப்பாக, சிறுகுடலில் ஏற்படும் குறைபாடுகள் பிரண்டையால் உடனடியாக நிவர்த்தியாகும். இதை எனது அனுபவத்தில் உணர்ந்தேன். பிரண்டை உப்பை சுமார் 300mg தேனி